மின்கட்டணம் உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் 3 இடங்களில் நடத்த திட்டம்




சென்னை: தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்துவது தொடர்பாக பொது மக்களின் கருத்து கேட்பு கூட்டம், 3 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பாரி முனையில் உள்ள ராஜ அண்ணாமலை மன்றத்தில் வரும் 24-ம் தேதியும் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரான்ஸ்சிஸ் சேவியியர் பொறியியல் கல்லூரில் 28-ம் தேதியும் கூட்டம் நடைபெறுகிறது. ஈரோடு வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள மல்லிகை அரங்கில் 31-ம் தேதியும் மூன்றாம் கூட்டம் நடத்த தமிழகஅரசு திட்டமிட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பவர்கள் காலை 9.30 மணிக்கே வந்து அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்துறையில் 6854 கோடி ரூபாய் அளவிற்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்திருந்தது. 

இதை சமாளிக்க மின்கண்டனத்தை உயர்த்த அந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளதை அடுத்து 100 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்காண கட்டணம் யூனிட் 1-க்கு உத்தேசமாக 40 காசுகல் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. மேலும் 201 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 60 காசுகளும் 500 யூனிட் மேல் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 85 காசுகளும் உயர்த்தவும் மின்சார ஓழுங்கு முறை ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துயிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click