TNEBAESU LETTER TO TANGEDCO REGARDING DOUBLE CHANNEL



பெறுநர்.                                                                  20-05-2014
இயக்குனர்,/ TTமின் தொடர் திட்டம்,
தமிழ்நாடு மின்சார வாரியம்,
சென்னை – 600 002

ஐயா,
              பொருள் : டான்ஜெட்கோ – களப்பிரிவு – தொழிலாளர்கள் – இரு வழிப்
                        பாதை பதவி உயர்வு – சீரமைத்திட குழு நியமனம் –   
                        பரிசீலனைக்கு கருத்துக்களை சமர்ப்பித்தல்.
              பார்வை ; 1) தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் 9-1-2014 அன்று
                          தொழிற் தகராறு சட்டம் 12 (3) கீழ் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்
                        2) TANGEDCO Proceedings No 26 (Adm.Br) Date 4-3-2014.

              பார்வை 1ல் வரையறுக்கப்பட்ட படி பார்வை 2ல் அமைக்கப்பட்டிருக்கும்  இரு வழிப் பாதை பதவி உயர்வு சீரமைப்பு குழு பரிசீலனைக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் கீழ்காணும் கருத்துக்களை சமர்ப்பிக்கின்றோம்.


1.   களப்பிரிவு தொழிலாளர்களான கம்பியாளர்-மின்பாதை ஆய்வாளர்-ஆக்க முகவர் முதல் நிலை வழிப் பாதைக்கும் வணிக உதவியாளர்-வணிக ஆய்வாளர்-ஆக்க முகவர் முதல் நிலை வழிப் பாதைக்கும் இடையே பதவி உயர்வில் உள்ள பெருத்த ஏற்றத் தாழ்வினை சீர் செய்திட வேண்டும்.
2.   கம்பியாளர் – மின் பாதை ஆய்வாளர் பதவி உயர்வு வாய்ப்பு 6:1 என்ற விகிதத்தில் உள்ளது. அதாவது 6 கம்பியாளர்களுக்கு இருக்கும் பதவி உயர்வு பொறுப்பு 1 மின் பாதை ஆய்வாளர் மட்டுமே.
3.   வணிக உதவியாளர் – வணிக ஆய்வாளர் பதவி உயர்வு வாய்ப்பு 1:1 என்ற விகிதத்தில் உள்ளது. அதாவது 1 வணிக உதவியாளருக்கு இருக்கும் பதவி உயர்வு வாய்ப்பு 1 வணிக ஆய்வாளர்.
4.   உதாரணத்திற்கு மேட்டூர் வட்டத்திற்கு (Per) B.P. (Ch).No.65,(Adm.Br)
Dated 22-06-2010 ல் அனுமதிக்கப் பட்ட பொறுப்புக்கள்;
Feeder Post கம்பியாளர் – பதவி உயர்வு பொறுப்பு  மின்பாதை ஆய்வாளர்
        314                              52 மட்டுமே.
ஆனால்



-2-
Feeder Post வணிக உதவியாளர் -  பதவி உயர்வு பொறுப்பு- வணிக     
                                      ஆய்வாளர் ,
          52                              52                                                                               
5.   இத்தகைய விகிதாச்சார பாகுபாட்டின் காரணமாக வணிக உதவியாளர்கள் விரைவாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பும், கம்பியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் தேக்க நிலை ஏற்படுவதும் தொழிலாளர்கள் மத்தியில் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
6.   வணிக உதவியாளர்கள் ஒரு சில ஆண்டுகளில் வணிக ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறுவதாலும், கம்பியாளர்கள் பல ஆண்டுகள் கழித்து மின்பாதை ஆய்வாளர் பதவி உயர்வு பெறுவதாலும் வணிக ஆய்வாளர்கள், மின்பாதை ஆய்வாளர் ஆகிய இந்த இரண்டு பணிவகையறாக்களையும் ஒருங்கிணைத்து ( Integrate) ஆக்க முகவர் முதல் நிலை பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப் படுவதால் விரைவில் பதவி உயர்வு பெற்ற வணிக ஆய்வாளர்கள் முன்னவர்களாகவும், மின்பாதை ஆய்வாளர்கள் பின்னவர்களாகவும் முதன்மை பட்டியலில் இடம் பெற்று,  இருக்கும் ஆக்க முகவர் முதல் நிலை பொறுப்புக்கள் அனைத்தையும் வணிக ஆய்வாளர்களே பெற்று விடுகிறார்கள்.
7.   ஆரம்பப் பொறுப்பான கள உதவியாளர் பொறுப்பில் சம காலத்தில் பணியில் சேர்ந்தும் கூட மின் பாதை ஆய்வாளர்களுக்கு ஆக்க முகவர் முதல் நிலைப் பொறுப்பு எட்டாக் கனியாகிவிடுகிறது. 
8.   பணிவிதிகள்படி மின்பாதை ஆய்வாளர் பதவி உயர்வு பெற 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது. ஆனால் வணிக ஆய்வாளருக்கு அத்தகைய பணி அனுபவம் வரையறுக்கப் படவில்லை. எனினும் வாரிய உத்திரவு B.P.M.S.94, (Adm.Br) Date 3-10-86ல் மின்பாதை ஆய்வாளர் / முகவர் இரண்டாம் நிலை மற்றும் அதற்கு இணையாக உள்ள பதவி உயர்வு பெற 8 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது –
9.   இருப்பினும் பல வட்டங்களில் இதை கவனத்தில் கொள்ளாமலும் பணிவிதிகளில் வணிக ஆய்வாளர் பதவி உயர்வுக்கு பணி அனுபவத்தை கணக்கிலெடுத்துக் கொள்ளாமலும் உடனடியாக வணிக ஆய்வாளர் பதவி உயர்வு வழங்குவதாகவும் அறிய வருகிறோம். இத்தகைய பாரபட்சங்கள் மின்பாதை ஆய்வாளர்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இது களையப்பட்வேண்டும்.
10.  வணிக ஆய்வாளர் பதவி உயர்வுக்கு பணி அனுபவம் தேவையில்லை என்றால் மின்பாதை ஆய்வாளர் பதவி உயர்வுக்கும் பணி ஆனுபவம் தேவையில்லை என்று அறிவித்திட வேண்டும்.
11.  வணிக உதவியாளர் – வணிக ஆய்வாளர் பதவி உயர்வு விகிதாச்சாரம் 1:1 என்றிருப்பதால் கம்பியாளர் – மின்பாதை ஆய்வாளர் பதவி உயர்வு விகிதாச்சாரத்தை 6:1 என்பதற்கு பதிலாக 3:1 என்று குறைத்திட வேண்டும். அதற்கு ஏதுவாக தேவைப்படும் எண்ணிக்கைக்கு ஏற்ப கம்பியாளர் பொறுப்பினை மேல்நிலை பொறுப்பாக(மின்பாதைஆய்வாளர் ) உயர்த்திட (அப்கிரேட்) வேண்டும்.
12.  அதே போல் வணிக ஆய்வாளர்கள் மற்றும் மின்பாதை ஆய்வாளர்கள் ஆகிய பொறுப்புக்களை ஒருங்கிணைத்து (Integrate) ஆக்க முகவர் முதல் நிலை பட்டியல் தயாரிக்கப் படும் போது அனைத்துப் பொறுப்புக்களையும்
-3-
வணிக ஆய்வாளர்களே பெற்று விடுகின்ற நிலைமையை தவிர்த்திட பிரிவு அலுவலகத்தில் உள்ள 2 ஆக்க முகவர் முதல்நிலை பொறுப்புக்களில் ஒன்றினை ஆக்க முகவர் ( CoCommercial) என்றும் மற்றொன்றினை ஆக்க முகவர் ( LinesLines) என்றும் இரண்டாகப் பிரித்து ஒன்றினை வணிக ஆயிவாளர்களுக்கும், மற்றொன்றினை மின்பாதை ஆய்வாளர்களுக்கும் பதவி உயர்வு பொறுப்பாக வழங்கிட வேண்டுமென்று வேண்டுகிறோம்.

மேற்கூறிய எங்களது கருத்துக்களை பரிசீலனை செய்து தங்களது தலைமையிலான குழு ஒரு மேலான அறிக்கையினை வழங்கிடுமென்று நம்புகிறோம். 


lbfhyf                                               தங்கள் உண்மையுள்ள,


                                                     தலைவர் 


       நகல் : செயலாளர் / டான்ஜெட்கோ
              கூடுதல் தலைமைப் பொறியாளர் / கோவை வடக்கு.
              ( குழு உறுப்பினர்கள் )   



No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click