குடும்ப ஓய்வூதியம் பெறுவது எப்படி?

ஓய்வூதியர்களின் இறப்புக்குப் பிறகுமனைவி அல்லது கணவன்இருந்தால் அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து கூறுகிறார் ஓய்வுபெற்றஅலுவலர்

 சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் கொ.சி.கருப்பன்.


அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகுஅவர்கள்கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் சரிபாதி தொகையை மாதஓய்வூதியமாக அரசு வழங்கிவருகிறதுஅவ்வாறு ஓய்வூதியம்பெறுபவர்கள் இறந்துவிடும் சூழ்நிலையில்அவரைச் சார்ந்துஇருக்கும் மனைவி அல்லது கணவருக்கு அரசு குடும்ப ஓய்வூதியம்வழங்குகிறதுசம்பந்தப்பட்ட அரசு ஊழியர் கடைசியாகப் பெற்றஊதியத்தில் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

குடும்ப ஓய்வூதியம் பெற சில வழிமுறைகள் உள்ளனஅதன்படிஓய்வூதியம் பெறுவோர் இறந்துவிட்டால்அவர் ஓய்வூதியம் பெற்றுவந்த கருவூலத்துக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.பி.பி..வில் (கொடுப்பாணை புத்தகம்இருக்கும் பெயர்நாள்,பி.பி.எண் உள்ளிட்ட விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.அதன்பின்னர்கருவூலத்தில் படிவம் 14 (குடும்ப ஓய்வூதியம்பெறுவதற்கான விண்ணப்பம்பெற்று அதை பூர்த்தி செய்து வழங்கவேண்டும்அந்தப் படிவத்தில் அரசு மருத்துவர்தலைமை ஆசிரியர்போன்ற அரசு உயரதிகாரிகளிடம் சான்றொப்பம் (அட்டெஸ்ட்பெற்றுகருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த படிவத்துடன் ஓய்வூதியரின் இறப்புச் சான்றிதழ், ‘வேறு எந்தஅரசுப் பணியிலும் இல்லை’, ‘மீண்டும் திருமணம்செய்துகொள்ளவில்லை’ என்பதற்கான இணைப்பு 1, 2 ஆகியபடிவங்களை பூர்த்தி செய்து இணைத்து வழங்க வேண்டும்தவிர,குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் இந்தியன் வங்கிபாரத் ஸ்டேட்வங்கி போன்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்குதொடங்கிவங்கிக் கணக்கு புத்தகத்தின் நகலையும் இணைத்துஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் வழங்க வேண்டும்சம்பந்தப்பட்டகருவூலம் மூலம் இத்தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு,சம்பந்தப்பட்ட நபருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

குடும்ப ஓய்வூதியம் கிடைக்கப் பெற்றவுடன்குடும்பப் பாதுகாப்பு நிதிபெறுவதற்கான விண்ணப்பத்தை கருவூலத்தில் பெற்று பூர்த்திசெய்து வழங்க வேண்டும்இந்த குடும்பப் பாதுகாப்பு நிதியானது,குடும்ப ஓய்வூதியர் இறந்த பிறகுஅவர்களது குடும்பத்தினருக்குவழங்கப்படும்குடும்ப பாதுகாப்பு நிதியாக அரசு தற்போது ரூ.50ஆயிரம் வழங்கி வருகிறது.

ஓய்வூதியர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி (FBF) பெறுவது எப்படி?

நல நிதி திட்டத்தைப் போலவேஓய்வுபெற்ற அரசுஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் குறித்து தமிழக அரசு கடந்தஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ஓர் அரசாணை வெளியிட்டதுஅந்ததிட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் 4
ஆண்டுக்கு ஒருமுறை ரூ.2 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறமுடியும்இதற்கு ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்யப்படாது.ஆனால்இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதுகுறித்து அரசு இன்னும் அறிவிக்கவில்லைஅநேகமாக விரைவில்அறிவிப்பு வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில்விருப்ப ஓய்வூதியம்(வி.ஆர்.எஸ்.) பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.
பொதுவாக நல நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் சிகிச்சைபெறவில்லை என்றாலும்கூட அவர்களது ஓய்வூதியத்தில் இருந்துமாதம் ரூ.150 பிடித்தம் செய்யப்படும்குடும்பப் பாதுகாப்பு நிதியைப்பொருத்தவரை ஓய்வூதியர் இறந்த பிறகுரூ.50 ஆயிரம்வழங்கப்படுகிறதுஆரம்பத்தில் இது ரூ.25 ஆயிரமாகவழங்கப்பட்டதுஇதற்கு மாதம் 20 ரூபாய் வீ்தம் ஓய்வூதியத்தில்பிடித்தம் செய்யப்படுகிறதுமுன்பு 12 மாதங்கள் முழுமையாக 20ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டால் மட்டுமே குடும்ப பாதுகாப்பு நிதிவழங்கப்பட்டு வந்ததுதற்போது ஒரு மாதம் 20 ரூபாய் பிடித்தம்செய்யப்பட்டாலே குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்படுகிறது.
ஓய்வூதியர்கள் இறந்த பின்பு 2 மாதங்களில் இந்த குடும்பப்பாதுகாப்பு நிதி வழங்கப்படும்ஒருவேளை ஓய்வூதியருக்கு மனைவிஇருந்தால் அவருக்கு அந்த தொகை நேரடியாக வழங்கப்படும்.இல்லாவிட்டால்ஓய்வூதியர் தனது வாரிசுதாரராககுறிப்பிட்டிருக்கும் நபருக்கு குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்கப்படும்.ஒரு வேளை ஓய்வூதியர் அல்லது குடும்ப ஓய்வூதியர்ஓய்வூதியம்பெறும் ஒரு மாதத்துக்குள் இறக்க நேரிட்டால்வங்கியில் உள்ளஅந்த ஓய்வூதியம்சம்பந்தப்பட்ட மகன்மகள் உள்ளிட்ட ரத்தஉறவுகளிடம் வழங்கப்படும்.
இந்த தொகை வாழ்நாள் நிலுவைத் தொகை (எல்.டி..) எனகுறிப்பிடப்படுகிறதுஇதற்காக படிவம் 16- சம்பந்தப் பட்டஓய்வூதியர் அல்லது குடும்ப ஓய்வூதியர்கள் இருக்கும்சமயத்திலேயே கருவூலத்தில் சமர்ப்பிப்பது நல்லது.
தற்போது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில்உள்ளதால் 10-04-2004க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர் களுக்குநல நிதிகுடும்பப் பாதுகாப்பு நிதி ஆகியவை பொருந்தாது.

விளக்கம்ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத்தலைவர் கொ.சிகருப்பன்

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click