மின்வாரிய தேர்வு முடிவுகள் வெளியிட தடை நீக்கம்உயர்நீதிமன்றம் உத்தரவு

மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
  தமிழக மின்வாரியத் தலைவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இவ்வாறு உத்தரவிட்டார். விக்டர் சத்தியசீலன் உள்ளிட்ட 14 பேர், மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான தேர்வு விதிகளை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே உயர்நீதிமன்றம் விசாரித்தது. மனுவில் அவர்கள்,  2009-ம் ஆண்டு 1100 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மின்வாரியம் தேர்வு நடத்தியது. மதிப்பெண் அடிப்படையில் இந்த தேர்வு நடைபெற்றதால் எங்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. மின்வாரிய பணிக்கான  பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு மீறபட்டு உள்ளதால் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத்தடை விதித்து 2013 நவ.27-ல் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தடையை நீக்குமாறு கோரி மின்வாரியம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில், 14 பேருக்காக தேர்வு முடிவுகளை வெளியிடாமல் வைத்திருப்பதால் மற்ற பயனாளிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எம்எம்.சுந்தரேஷ், பிறப்பித்த உத்தரவு: மின்வாரிய தேர்வு நடைமுறை விதிகள் தொடர்பான பிரச்னை 14 பேர் சம்பந்தப்பட்டதாக மட்டும் இருப்பதால் ஒட்டுமொத்தமாக தடை விதிக்கத் தேவையில்லை. எனவே 14 பேருக்கு பணியிடங்களை காலியாக வைத்து, மீத பணியிடங்களை நிரப்ப தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click