ஈரோட்டில் 15ம் தேதி இணைப்புகளில் பெயர் மாற்றம் மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

ஈரோட்டில், நீண்ட நாட்களாக, கட்டிடங்கள், விவசாய கிணறுகளில் மின் இணைப்பு உரிமையாளர்களின் பெயர் மாற்றம் செய்ய, ஃபிப்ரவரி, 15ம் தேதியன்று, ஈரோடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து செயற்பொறியாளர் சுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு நகரிய கோட்டத்துக்கு உட்பட்ட, பல தாழ்வழுத்த மின் இணைப்புகள், தற்போதைய கட்டிடங்கள் மற்றும் விவசாய கிணறுகளின் உரிமையாளர்களின் பெயரில் மாற்றப்படாமல், பழைய உரிமையாளர் பெயரில் இருந்து வருகிறது. மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்து கொள்ள ஏதுவாக, ஈரோடு, ஈ.வி.என்., ரோடு மின்வாரிய வளாகம், ப்ராஜெக்ட் பெஸ்ட் ஹாலில், ஃபிப்ரவரி, 15ம் தேதி, காலை, 9.30 முதல், மாலை, 5 மணி வரை, சிறப்பு முகாம் நடக்கிறது. ஈரோடு நகர் மற்றும் (தெற்கு, மேற்கு, கிழக்கு), இடையன்காட்டு வலசு, முத்தம்பாளையம், திண்டல், நசியனூர், நாராயணவலசு, மேட்டுக்கடை, கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் (நகர்) மற்றும் (கிராமியம்), பி.பி., அக்ரஹாரம், அசோகபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த, மின் நுகர்வோர் கலந்து கொள்ளலாம்.

மின் இணைப்பு விண்ணப்பம், தாழ்வழுத்த ஒப்பந்த படிவம் (விவசாய இணைப்பாக இருப்பின் வி.ஏ.ஓ., சான்று). பெயர் மாற்றக்கட்டணம், குடிசைக்கு, 50 ரூபாய், மற்ற இணைப்புக்கு, 200 ரூபாய். விவசாய மின் இணைப்புக்கு பட்டா, சிட்டா, அடங்கல், வரைபடம், மின் இணைப்பு உரிமையாளர் இறப்பின் பேரில், பெயர் மாற்றம் எனில், அதற்கான அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும். மற்ற இனங்களில், பேரில் பெயர் மாற்றமானால், முந்தைய உரிமையாளரின் சம்மத கடிதம், கூட்டு உரிமையாளரின் சம்மத கடிதம், புதிய காப்புத்தொகையை செலுத்த வேண்டும்.
துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்ற அனுமதி வழக்க இயலாது. மின்நுகர்வோர் போதிய ஆவணத்துடன் வந்து, உரிய தொகையை செலுத்தி, மின் இணைப்பு உரிமையாளர் பெயரை, அன்றைய தினம் மாற்றிக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click