தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

 அரசு ஆணை           fin_e_377_2013.pdf
                      View   Download
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான ஊழியர்கள், தமிழ்நாடு குடிமைப் பொருள் கழக ஊழியர்கள், தமிழ்நாடு கூட்டுறவு துறை, பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஊழியர்கள், பூம்புகார் கப்பல் கழகம், தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர்கள், அரசு ரப்பர் கழகம், வனத்துறை ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். பொதுத் துறை நிறுவன தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களின் ரூ.4300 அடிப்படை ஊதியத்தில் ரூ.9300–ரூ.34,800 வரை ஊதியமாக பெறுபவர்கள் மற்றும் அதற்கு கீழ் ஊதியம் பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் 8.33 சதவீதம் மற்றும் கருணைத் தொகை 1.67 சதவீதம் கிடைக்கும்.

இது 1961–ம் ஆண்டு வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் செலவீன தகுதி உள்ளதாகும். ரூ.3500 ஊதிய உச்சவரம்பு தகுதி உள்ளவர்களுக்கு 2012–13–ம் ஆண்டுக்கு போனஸ் நிர்ணயிக்கும் ஊதிய உச்சவரம்பு ரூ.10 ஆயிரம் ஆகவும், 1965–ம் ஆண்டு போனஸ் ஊதிய சட்டத்தின்படி தளர்த்தப்படுகிறது. 1965–ம் ஆண்டு போனஸ் ஊதிய சட்டத்தின்படி தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சட்டரீதியான குறைந்தபட்ச போனஸ் அளவைக் காட்டிலும் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை போனஸ் வருகிற 30–ந்தேதிக்குள் வழங்கப்படும். கடந்த 1965–ம் ஆண்டு போனஸ் ஊதிய சட்டத்தின்படி இது கொடுக்கப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட அதிக போனஸ் ஊதியத்தொகை 10 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் கருணைத் தொகையும், போனசும் 10 சதவீதத்துக்கு மிகாமல் கொடுக்கப்படும். 2012–13–ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பணிபுரிந்த மேற்கண்ட ஊதிய விகிதத்தில் குறைவான ஊழியர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள் மூலம் இது பற்றிய ஆணைகள் வெளியிடப்படும். ‘ஏ’ மற்றம் ‘பி’ பிரிவு அரசு ஊழியர்களை பொறுத்தவரை தனித்தனியாக ஊதிய உத்தரவு அதற்கென்று அமைக்கப்பட்ட போனஸ், கருணைத் தொகை உத்தரவின் அடிப்படையில் வழங்கப்படும். வேறு ஏதாவது இருந்தால் பொங்கல் பண்டிகையின் போது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click