கேரளாவில் இன்று முதல் மின்கட்டணம் அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் மின் கட்டணம் சராசரியாக 12 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ரூ.650 கோடி கூடுதலாக கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. கேரள மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.1050 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதை சரிகட்ட மின் கட்டணத்தை ரளவு உயர்த்த வேண்டும் என மின்சார வாரியம், மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு கோரிக்கை வைத்தது. இதனை பரிசீலித்த ஒழுங்கு முறை ஆணையம் சராசரியாக 12 சதவீதம் அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து இன்று முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.


மாதம் 40 யூனிட்கள் வரை உபயோகிப்போருக்கு மின் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. 41 யூனிட்கள் முதல் 80 யூனிட் வரை உபயோகிப்போர் யூனிட் ஒன்றுக்கு ரூ.2.20, 81 யூனிட்டிலிருந்து 120 யூனிட் வரை செலவழிப்பவர்கள் ரூ.3ம், 121லிருந்து 150 வரையிலான யூனிட்டுக்கு ரூ.3.80ம், 151லிருந்து 200 வரை ரூ.5.30ம், 200லிருந்து 300 வரை ரூ. 6.50ம் இனி கட்டணமாக செலுத்த வேண்டும். இதன் வாயிலாக மின் வாரியத்துக்கு ரூ.650 கோடி கூடுதலாக கிடைக்கும்.

மின் கட்டண உயர்வு ஏழை மக்களை பாதிக்காது என மாநில முதல்வர் உம்மன்சாண்டி கருத்து தெரிவித்துள்ளார். இந்த உயர்வுக்கு பின்னரும் மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பினை மானியம் வாயிலாக சரி செய்யப்படும் எனவும், மானியத் தொகையை அதிகரிப்பது குறித்து அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click