தமிழகத்தில், மின் பற்றாக்குறையை போக்க, வெளி மாநிலங்களில் இருந்து, 3,500 மில்லியன் யூனிட் மின்சாரத்தைப் பெற, மின்வாரியத்திற்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்து உள்ளது.


சென்னை: தமிழகத்தில், மின் பற்றாக்குறையை போக்க, வெளி மாநிலங்களில் இருந்து, 3,500 மில்லியன் யூனிட் மின்சாரத்தைப் பெற, மின்வாரியத்திற்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்து உள்ளது.
தமிழகத்தில், தற்போது சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், 10 மணி நேரத்திற்கும் அதிகமாக, மின் வெட்டு ஏற்படுத்தப்படுகிறது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், மின்வாரியம் சார்பில், கடந்த மே மாதம், வெளி மாநிலங்களில் இருந்து, 10,300 மில்லியன் யூனிட் வாங்குவதற்கு ஒப்புதல் கேட்டு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு செய்யப்பட்டது. ஆனால், கடந்த மே மாதம் முதல், அடுத்தாண்டு மே மாதம் வரையில், 4,000 மில்லியன் யூனிட் வரை மின்சாரம் பெற்றுக் கொள்ள அனுமதியளித்து உள்ளது. இதில், ஏற்கனவே, 500 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்டுவிட்டதால், மீதமுள்ள, 3,500 மில்லியன் யூனிட் மின்சாரத்தை, இம்மாதம் முதல், வரும் ஆண்டு மே மாதம் வரை, யூனிட்டிற்கு, 4.13 ரூபாய் முதல், ஐந்து ரூபாய் விலையில் பெற்றுக் கொள்ள, அனுமதியளித்து உள்ளது. தமிழகம் ஏற்கனவே, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து, மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ள நிலையில், இந்த அனுமதி சற்று ஆறுதலளித்து உள்ளது.

இது குறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ""ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்தாலும், மின் பாதையில் ஏற்பட்டுள்ள பிரச்னை தீர்ந்தால் தான், முழுமையான மின்சாரம் கிடைக்கும். இதற்கிடையில், மேட்டூர், வல்லூர் திட்டங்களில் இருந்து, இம்மாதத்திற்குள், 975 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும்,'' என்றார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click